உலகம்

கோடிகளில் சம்பளம்… பிரித்தானிய தீவொன்றில் ஒரு அரிய வேலைவாய்ப்பு

Published

on

கோடிகளில் சம்பளம்… பிரித்தானிய தீவொன்றில் ஒரு அரிய வேலைவாய்ப்பு

பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து நாட்டுக்குச் சொந்தமான தீவொன்றில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, அங்கு பணிக்கு வரும் மருத்துவர்களுக்கு,ஆண்டுக்கு 150,000 பவுண்டுகள் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்துக்குச் சொந்தமான Uists மற்றும் Benbecula தீவுகளில் கடும் மருத்துவர் பற்றாக்குறை நிலவுகிறது.

ஆகவே, பிரித்தானிய மருத்துவ அமைப்பான NHS, அந்த தீவுகளுக்கு பணிக்குச் செல்லும் மருத்துவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 150,000 பவுண்டுகள் சம்பளம் (இந்திய மதிப்பில் 1,57,44,404.58 ரூபாய், இலங்கை மதிப்பில் 5,84,77,279.68 ரூபாய்) வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

அங்கு பணி செய்யும் மருத்துவர்களுக்கு, வாரத்துக்கு 40 மணி நேர வேலை, போனஸ், 41 நாட்கள் விடுமுறை என பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version