உலகம்

புர்ஜ் கலீஃபாவை விட 3 மடங்கு உயரம்! கடலுக்கடியில் பிரமாண்ட மலை கண்டுபிடிப்பு

Published

on

புர்ஜ் கலீஃபாவை விட 3 மடங்கு உயரம்! கடலுக்கடியில் பிரமாண்ட மலை கண்டுபிடிப்பு

புர்ஜ் கலீஃபாவை விட மூன்று மடங்கு உயரம் கொண்ட மலை உட்பட, நான்கு புதிய நீருக்கடியில் உள்ள மலைகளை ஷ்மிட் ஓஷன் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகின் 70% பரப்பளவை ஆக்கிரமித்துள்ள ஒரு மர்மம் நிறைந்த உலகம் தான் கடல்.

நிலப்பரப்பில் நாம் கண்டறிந்ததை விட, கடலின் ஆழத்தில் இன்னும் எத்தனையோ புதிய விஷயங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவியல் ஆய்வுகள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன.

அந்தவகையில், சமீபத்தில் ஷ்மிட் ஓஷன் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பு, பசிபிக் பெருங்கடலில் நடத்திய ஆய்வில், புர்ஜ் கலீஃபாவை(Burj Khalifa) விட மூன்று மடங்கு உயரமான ஒரு நீருக்கடியில் மலையை கண்டுபிடித்துள்ளது.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மலை, மற்ற மூன்று மலைகளுடன், ஒரு வழக்கமான வரைபடப் பயணத்தின் போது கண்டறியப்பட்டது.

பல கற்றை சோனார் தொழில்நுட்பத்தை(multibeam sonar technology) பயன்படுத்தி ஆராய்ச்சிக் குழு, கடல் தளத்தில் எதிர்பாராத இந்த குவிந்த பகுதிகளைக் கண்டறிந்துள்ளது.

இவை பிரமாண்டமான கடலடி மலைகள், அல்லது கடலடி மலைக்குன்றுகள்(seamount) என்றும் அழைக்கப்படுகின்றன.

இதுவரை கண்டுபிடிக்கப்படாத இந்த கடலடி மலைகளில், உயரமான மலை சுமார் 2,681 meters (8,796 feet) உயரம் கொண்டது.

அகலம் சுமார் 3.5 கிலோமீட்டர் ஆகும். புர்ஜ் கலீஃபாவின் அற்புதமான 828 மீட்டர் (2,717 அடி) உயரத்தை மிஞ்சுகிறது.

கடலின் மேற்பரப்புக்கு கீழ் மறைந்திருக்கும் பல்வேறுபட்ட மற்றும் மர்மமான நிலப்பகுதியைப் பற்றிய நமது புரிதலை கூட்ட உதவுகிறது.

கோஸ்டாரிகாவிலிருந்து சிலிக்கு செல்லும் வழியில் ஆராய்ச்சியை மேற்கொண்டு இருந்த போது தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த பிரம்மாண்ட மழையை கண்டுபிடித்துள்ளனர்.

Exit mobile version