உலகம்

புற்றுநோயுடன் மன்னர் சார்லஸ்: சுற்றுலாவுக்கு புறப்பட தயாராகும் கமிலா

Published

on

புற்றுநோயுடன் மன்னர் சார்லஸ்: சுற்றுலாவுக்கு புறப்பட தயாராகும் கமிலா

சார்லஸ் மன்னருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரச குடும்பத்து உறுப்பினர்கள் பலர் தங்களின் அன்றாடப் பணிகளில் இருந்து விலகி இருக்க, ராணியார் கமிலா சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி மாதம் சார்லஸ் மன்னருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் ராணியார் கமிலாவே மொத்த பணிகளையும் முன்னெடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் அன்றாட பணிகளில் இருந்து ஓய்வெடுத்துக்கொள்ளும் வகையில் 76 வயதான கமிலா விடுமுறைக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை அவர் விமான பயணம் மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்த தருணத்தில் யார் பொறுப்பில் இருப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பட்டத்து இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் மிடில்டன் சிகிச்சைக்கு பின்னர் ஓய்வில் இருப்பதால், அவருக்கு உதவியாக உள்ளார்.

இதனால் ஈஸ்டர் பண்டிகைக்கு பின்னரே அன்றாட பணிகளில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்திற்கு பின்னர் கேட் மிடில்டன் பொதுவெளியில் தென்படவில்லை என்பதுடன், அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்ற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது.

மேலும், தமது ஞானத்தந்தைக்கான இறுதிச்சடங்கிலும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் கலந்துகொள்ளவில்லை. ஆனால் ராணியார் கமிலா மட்டும் ஜனவரி தொடங்கி 13 உத்தியோகப்பூர்வ சந்திப்புகளை முன்னெடுத்துள்ளார்.

தற்போது விடுமுறைக்கு திட்டமிட்டுள்ள கமிலா, மார்ச் 11ம் திகதி மீண்டும் உத்தியோகப்பூர்வ சந்திப்புகளை முன்னெடுப்பார் என்றே கூறப்படுகிறது.

Exit mobile version