உலகம்

ஹவுதி தளபதி மீது அமெரிக்கா பொருளாதார தடை

Published

on

ஹவுதி தளபதி மீது அமெரிக்கா பொருளாதார தடை

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் யேமனின் ஹவுதி கிளா்ச்சிப் படையின் முக்கிய தளபதி மீது அமெரிக்காவும், பிரிட்டனும் புதன்கிழமை பொருளாதாரத் தடை அறிவித்தன.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலக செய்தித் தொடா்பாளா் மத்யூ மில்லா் கூறியதாவது:

செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் ஹவுதி படையின் முக்கிய தளபதி இப்ராஹிம் அல்-நஷீரி மீது அமெரிக்காவும், பிரிட்டனும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இது மட்டுமன்றி, இந்த விவகாரத்தில் ஈரானின் துணை இராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிப் படையின் துணை தளபதி முகமது ரெஸா ஃபலாஸ்தே மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஈரான் மற்றும் ஹத்தி அதிகாரிகளுக்கு வா்த்தகப் பொருள்களைக் கொண்டு சென்ற ஹொங்கொங்கைச் சோ்ந்த கேப் டீஸ், கொஹானா ஆகிய நிறுவனங்களும் தடைப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.

சா்வதேச வா்த்தக வழித்தடத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் அமெரிக்காவும், கூட்டணி நாடுகளும் உறுதியாக உள்ளதை இந்தப் பொருளாதாரத் தடைகள் உணா்த்துகின்றன என்றாா் மத்யூ மில்லா்.

இஸ்ரேல் தொடா்பான சரக்குக் கப்பல்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்துவதாக ஹவுதி கிளா்ச்சியாளா்கள் கூறினாலும், பிற கப்பல்களும் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

Exit mobile version