உலகம்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்த இளம்பெண்ணுக்கு தடை

Published

on

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்த இளம்பெண்ணுக்கு தடை

ஐ.எஸ்.ஐ.எஸ் வலையமைப்பில் இணைந்த இளம் பெண் சமீமா பேகம், தனது பிரித்தானிய குடியுரிமையை மீண்டும் பெறுவதற்கான மற்றொரு சட்ட முயற்சியிலும் தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தீர்ப்பினால் தற்போது 24 வயதான சமீமா பேகம் தொடர்ந்தும் சிரியாவிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2019இல் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது குடியுரிமையை பிரித்தானிய அரசாங்கம் மீளப்பெற்றிருந்தது.

இந்நிலையில், சமீமா பேகம் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் 15 வயதில் லண்டனை விட்டு சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளார்.

இதற்கமைய மூன்று மேன்முறையீட்டு நீதியரசர்களின் தீர்ப்பும் ஒருமனதாக இருந்ததோடு மீண்டும் சமீமா பேகம் பிரித்தானிய உயர்நீதிமன்றில் இந்த தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தியிருந்தார்.

இதற்கமைய வாதியின் சட்டத்தரணியான டேனியல் ஃபர்னர், “பேகத்துக்கு நீதி கிடைக்கும் வரை, பாதுகாப்பாக அவர் லண்டன் திரும்பும் வரை சட்டப்போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

எனினும் நீதியரசர்கள், பேகத்தின் அனைத்து வாதங்களையும் முற்றிலுமாக நிராகரித்தமையானது, உயர்நீதிமன்றில் முழு முறையீட்டைப் பெறுவதற்கான அவரது திறனைப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு ஒரு விசாரணையில் தோல்வி ஏற்பட்டதை அடுத்தே பேகத்தின் சட்டத்தரணிகள், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர்.. அவரது குடியுரிமையை அகற்றுவதற்கான உள்துறை அலுவலகத்தின் முடிவு சட்டவிரோதமானது என்று வாதிட்டனர்.

இந்தநிலையில் இன்றைய தீர்ப்பு, பிரித்தானிய அரசாங்கத்திற்கு கணிசமான வெற்றியைப் பிரதிபலிக்கிறது எனவும், சாத்தியமான சட்ட நெருக்கடியைத் தவிர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்றத்தின் முடிவிற்கு பதிலளித்த பிரித்தானிய உள்துறை அலுவலகம், இங்கிலாந்தின் பாதுகாப்பை பராமரிப்பதே தமது முன்னுரிமை என்றும் கூறியுள்ளது.

Exit mobile version