உலகம்

இந்திய பெருங்கடலில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு கூட்டுப்பயிற்சி

Published

on

இந்திய பெருங்கடலில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு கூட்டுப்பயிற்சி

சீனாவில் இருந்து சந்தேகத்திற்கு இடமான உளவு கப்பல் ஒன்று மாலத்தீவின் மாலே கடற்கரைக்கு அருகே வந்து சில நாட்கள் நங்கூரமிடவுள்ளது.

இதையடுத்து இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன.

சீனக் கப்பல் Xiang Yang Hong-03 வியாழன் மதியம் மாலே துறைமுகத்தை வந்தடைந்ததாக கப்பல்களைக் கண்காணிக்கும் Editon இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் மாலத்தீவில் நங்கூரமிடுவதற்கு அரசாங்கம் ஜனவரி 23 அன்று அனுமதி வழங்கியது.

இந்த ஆராய்ச்சிக் கப்பல் கடல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டதாக சீனா கூறினாலும், இது உளவுக் கப்பலாக இருக்கலாம் என்பதால் அண்டை நாடுகள் கண்காணித்து வருகின்றன.

இதையடுத்து மாலத்தீவு கடலோர காவல்படை, இந்திய மற்றும் இலங்கை கடற்படைகள் இணைந்து ‘தோஸ்தி-16’ (DOSTI-16) என்ற பெயரில் கூட்டுப் பயிற்சியை வியாழக்கிழமை தொடங்கியுள்ளன.

இது பிப்ரவரி 25 வரை தொடரும். பரஸ்பர ராணுவ திறனை மேம்படுத்தவும், ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மாலத்தீவு அதிபர் தேர்தலில் சீனாவின் விருப்பமான முகமது முய்சு ஆட்சிக்கு வந்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

Exit mobile version