உலகம்

இந்திய கடற்படைக்கு வந்து குவியப்போகும் ஏவுகணைகள்

Published

on

இந்திய கடற்படைக்கு ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் செல்லும் பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் வாங்கப்படவுள்ளன.

சுமார் ரூ.19 ஆயிரம் கோடி செலவில் 200-க்கும் மேற்பட்ட பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை வாங்குவதற்கு அமைச்சர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “இந்தியா-ரஷ்ய கூட்டு முயற்சியான பிரமோஸ் ஏரோ ஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள் மற்றும் தரை தளங்களில் இருந்து ஏவக்கூடிய சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை உற்பத்தி செய்கிறது.

பிரமோஸ் என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணைகள் ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் பறக்கும்.

இத்தகைய வலிமை மிக்க 200 பிரமோஸ் ஏவுகணைகளை இந்திய கடற்படைக்கு வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏவுகணைகளை வாங்குவதற்கான முறையான ஒப்பந்தம் அடுத்த சில மாதங்களில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர்கள் கூறினர்.

Exit mobile version