இந்தியா

நடிகர் விஜய் கட்சியின் மீது பாய்ந்த முதல் வழக்கு

Published

on

நடிகர் விஜய் கட்சியின் மீது பாய்ந்த முதல் வழக்கு

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அனுமதியின்றி ஏற்றியதாக அக்கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார்.

கட்சியில் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை இணைக்க மும்முரமாக வேலைகள் நடந்து வருகிறது.

கட்சியின் முக்கிய நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த் கட்சி நிர்வாகிகளுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து தமிழக வெற்றிக் கழகம் பணியாற்றி வருகிறது.

இந்நிலையில் அனுமதியின்றி கட்சிக்கொடி ஏற்றியதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை பகுதியில் புத்தமங்கலம், நெடுமானூர் மட்டிகை ஆகிய ஊர்களில் விஜய் கட்சி சார்பில் நேற்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட பொறுப்பாளர் தலைமையில், அப்பகுதியில் உள்ள கிராமங்களில் கட்சிக்கொடியை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

இதற்கு காவல்துறையிடம் உரிய அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் கட்சிக்கொடி ஏற்றிய விஜய் கட்சியினர் அனைவரும் கைது செய்யப்பட்டு கட்சிக் கொடியும் அகற்றப்பட்டது.

அத்துடன் அனுமதியின்றி கட்சிக் கொடி ஏற்றியதாக தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர் உட்பட 20 பேர் மீது வழக்குப் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version