உலகம்

ஒன்லைன் ஷாப்பிங்கில் அதிகம் செலவு செய்பவர்கள் இவர்கள் தான்!

Published

on

ஒன்லைன் ஷாப்பிங்கில் அதிகம் செலவு செய்பவர்கள் இவர்கள் தான்!

ஒன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை விட ஆண்களே அதிகம் செலவு செய்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்திய நகரமான அகமதாபாத்தில் உள்ள IIM சார்பில், நாடு முழுவதும் உள்ள 25 மாநிலங்களில் ஒன்லைன் ஷாப்பிங் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வு 35,000க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்டது. அப்போது ஆண்கள் அதிகம் செலவு செய்வது தெரிய வந்தது.

அதாவது, ஆண்கள் சராசரியாக 2,484 ரூபாய் செலவு செய்யும் நிலையில், பெண்கள் 1,830 ரூபாய் மட்டுமே செலவு செய்கிறார்கள்.

இதன்மூலம் பெண்களை விட ஆண்கள் 36 சதவீதம் அதிகம் ஷாப்பிங் செய்வதாக அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

குறிப்பாக Fashion ஆடைகள் வாங்குவது குறித்த ஆய்வில் 47 சதவீத ஆண்களும், 58 சதவீத பெண்களும் ஆடைகளை வாங்கியுள்ளனர்.

அதே சமயம் 23 சதவீத ஆண்கள், 16 சதவீத பெண்கள் ஒன்லைன் மூலம் மின்னணு சாதனங்களை ஷாப்பிங் செய்துள்ளனர் என தெரிய வந்தது.

இதற்கிடையில் ஜெய்ப்பூர், லக்னோ, நாக்ப்பூர், கொச்சி போன்ற நகரங்களில் இருப்பவர்கள் ஒன்லைனில் Fashion ஆடைகளுக்கு 63 சதவீதம் அதிகமாகவும், மின்னணு சாதனங்களுக்கு 21 சதவீதம் அதிகமாகவும் செலவழிப்பது தெரிய வந்துள்ளது.

Exit mobile version