உலகம்
உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள குழந்தைகளைக் காப்பாற்றும் வயாக்ரா மாத்திரை: ஒரு ஆச்சரிய தகவல்…
உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள குழந்தைகளைக் காப்பாற்றும் வயாக்ரா மாத்திரை: ஒரு ஆச்சரிய தகவல்…
வயாக்ரா மாத்திரை, உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள பச்சிளங்குழந்தைகளைக் காப்பாற்றலாம் என கனேடிய மருத்துவர்கள் சிலர் மேற்கொண்ட ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
தாம்பத்ய உறவில் பிரச்சினை கொண்டவர்களுக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் வயாக்ரா மாத்திரைகளை, உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள பச்சிளங்குழந்தைகளைக் காப்பாற்றவும் பயன்படுத்த முடியும் என வெளியாகியுள்ள ஒரு தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனேடிய மருத்துவரான Dr. Pia Wintermark என்பவர் தலைமையில் மருத்துவர்கள் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வின் முதற்கட்ட முடிவுகளிலிலிருந்து இந்த ஆச்சரிய தகவல் தெரியவந்துள்ளது.
கர்ப்பத்தில் இருக்கும்போது அல்லது பிரசவத்தின்போது குழந்தைக்கு ஆக்சிஜன் தேவையில் பிரச்சினை ஏற்பட்டால், அது குழந்தையின் மூளையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். அது, neonatal encephalopathy என அழைக்கப்படுகிறது.
தற்போது, இந்த பிரச்சினையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு physiotherapy, occupational therapy போன்ற உதவியளிக்கும் சிகிச்சைகள் மட்டுமே உள்ளனவே தவிர தெளிவான சிகிச்சை முறைகள் சரியாக இல்லை.
உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள குழந்தைகளைக் காப்பாற்றும் வயாக்ரா மாத்திரை
இந்நிலையில், கனடாவின் மொன்றியல் குழந்தைகள் நல மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் Dr. Pia Wintermark என்பவர் தலைமையில் மருத்துவர்கள் குழு ஒன்று இந்த neonatal encephalopathyக்கான சிகிச்சை தொடர்பில் ஆய்வுகள் மேற்கொண்டு வந்தது.
ஆய்வின் முதற்கட்ட முடிவுகள் நல்ல செய்தி ஒன்றைக் கொடுத்துள்ளன. ஆம், வயாக்ரா மாத்திரைகள் neonatal encephalopathy பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவக்கூடும் என அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 30 நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், குழந்தைகளின் மூளையில் ஏற்பட்டிருந்த காயங்கள் பகுதியளவு குணமாகியுள்ளதும், மூளை செல்கள் இழப்பு குறைந்துள்ளதும், மூளையின் deep gray matter என்னும் விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.
ஆக, இந்த ஆய்வு முழுமையாக வெற்றி பெறுமானால், அது neonatal encephalopathy பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எதிர்காலத்தையே மாற்றக்கூடும் என்கிறார் Dr. Pia Wintermark.