உலகம்

காசா அகதிகளை தடுக்க எல்லை சுவர் எழுப்பும் எகிப்து

Published

on

காசா அகதிகளை தடுக்க எல்லை சுவர் எழுப்பும் எகிப்து

காசாவில் இருந்து தப்பி செல்லும் அகதிகளை தடுப்பதற்காக ரபா நகருக்கு அருகில் இராணுவத்தின் உதவியுடன் எகிப்து எல்லைச்சுவர் எழுப்பி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இதுகுறித்து எகிப்து அரசாங்கம் தரப்பில் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இஸ்ரேல்-காசா இடையேயான போர் கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பமானது. 4 மாதங்களுக்கும் மேலாக தொடரும் இந்த போரில் இதுவரை சுமார் 10 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியானதாக அறிக்கைகள் மூலம் கூறப்படுகிறது.

இதனால் உயிருக்கு பயந்து ஏராளமானோர் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அதன்படி இலட்சக்கணக்கானோர் எகிப்து எல்லை நகரமான ரபாவில் உள்ள அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் ரபா நகருக்கு அருகில் இராணுவத்தின் உதவியுடன் எகிப்து எல்லைச்சுவர் எழுப்பி வருகிறது.

இது காசாவில் இருந்து தப்பி செல்லும் அகதிகளை தடுப்பதற்காக இந்த சுவர் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காசாவின் மேற்கு எல்லையில் ஷேக் ஜூவைத் – ராபா நகரங்களை இணைக்கும் சாலையையொட்டி 3.5 கிலோமீற்றர் தொலைவுக்கு சுவர் கட்டுமானம் நடைபெற்று வருகின்ற செயற்கை கோள் படங்களை மேக்ஸர் டெக்னாலஜீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Exit mobile version