உலகம்

நிறைவேறும் பாபா வங்காவின் கணிப்புகள்

Published

on

நிறைவேறும் பாபா வங்காவின் கணிப்புகள்

2024இல் நடக்கலாம் என பாபா வங்கா கணித்துள்ள சில விடயங்கள் நிறைவேறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் இந்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும் என்றும், புற்றுநோய்க்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளது நிறைவேறி வருவதாக நிபுணர்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பல்கேரியா நாட்டவரான கண்பார்வையை இழந்த பாபா வங்கா எதிர்காலம் தொடர்பில் பல்வேறு விடயங்களை கணித்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல், இளவரசி டயானாவின் கோர விபத்து, ரஷ்ய அணு உலை பேரழிவு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் என அவர் கணித்துள்ளதாக கூறப்படும் விடயங்கள் நிறைவேறியுள்ளன.

இவ்வாறான சூழலில் இந்த ஆண்டிற்கான கணிப்பில் புற்றுநோய் தடுப்பூசி மற்றும் முதன்மையான இரு நாடுகளின் பொருளாதார நெருக்கடி குறித்து பாபா வங்கா கணித்திருந்த நிலையில் அந்த கணிப்புகள் நிறைவேறியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி புற்றுநோய் தடுப்பூசி ஒன்றை ரஷ்யா உருவாக்கியுள்ளதாகவும், அது இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அண்மையில் அறிவித்திருந்தார்.

அது மிக விரைவில் நோயாளிகளுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

அத்துடன் இவ்வாண்டு உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும் என்ற பாபா வங்காவின் கணிப்பை உறுதி செய்யும் வகையில், பிரித்தானியா பொருளாதார சிக்கலை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது 2023ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.3 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதே நெருக்கடியை தற்போது ஜப்பானும் எதிர்கொண்டுள்ளது.

2023ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.4 சதவிகிதம் குறைந்துள்ளது.

மட்டுமின்றி, ஜப்பான் கடந்த ஆண்டு ஜேர்மனியை விட பொருளாதாரத்தில் சரிவை எதிர்கொண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு சென்றது.

இந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு பாபா வங்காவின் இவ்வாண்டுக்கான கணிப்புகள் சில நிறைவேறி வருவதாக கூறப்படுகிறது.

எனினும் பொருளாதார நெருக்கடி மட்டுமின்றி, ஐரோப்பாவில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரிக்கும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளதுடன், இந்த ஆண்டில் இயற்கை பேரிடர் தொடர்பிலும் பாபா வங்கா கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியிருந்த போதிலும் இவ்வாண்டு இறுதியிலேயே கணிப்புகள் நிறைவேறியதா இல்லையா என்பதை கூற முடியும்.

Exit mobile version