உலகம்

அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய தம்பதியர்: வீடு சென்று சேரும் முன் நிகழ்ந்த பரிதாபம்

Published

on

அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய தம்பதியர்: வீடு சென்று சேரும் முன் நிகழ்ந்த பரிதாபம்

வயது முதிர்ந்த ஒரு தம்பதி, அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய நிலையில், வீடு திரும்பும் முன் விமான நிலையத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் அந்த கணவர்.

திங்கட்கிழமையன்று, ஒரு கணவரும் மனைவியும் அமெரிக்காவிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் இந்தியா வந்துள்ளனர்.

இருவரும் வயது முதிர்ந்தவர்கள். ஆகவே, சக்கர நாற்காலி வசதிக்காக முன்கூட்டியே முன்பதிவும் செய்துள்ளார்கள். ஆனால், மும்பை விமான நிலையத்தில் போதுமான சக்கர நாற்காலிகள் இல்லாததால், ஒரு சக்கர நாற்காலி மட்டுமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த சக்கர நாற்காலியை மனைவிக்குக் கொடுத்த கணவர், மனைவியின் பின்னாலேயே நடந்துவந்துள்ளார். அவருக்கு வயது 80. சுமார் 1.5 கிலோமீற்றர் தூரம் நடந்த அவர், திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.

ஆம், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆக, வீட்டுக்குக் கூட செல்லாமல் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.

அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருக்கும் அந்த நபர், அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து விட்டு, வீட்டுக்குக் கூட செல்லாமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்த மக்கள், சக்கர நாற்காலி இல்லையென்றால் என்ன, பேட்டரியில் இயங்கும் பயணிகளுக்கான வாகனங்கள் உள்ளனவே, அவற்றில் 10 பேர் கூட பயணிக்கலாமே. விமான நிறுவனம் ஏன் அவற்றிற்கு ஏற்பாடு செய்யவில்லை என்று கேட்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

Exit mobile version