உலகம்

தேர்தலில் ரிஷி கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும்… அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்

Published

on

தேர்தலில் ரிஷி கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும்… அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சார்ந்த கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, வரும் பொதுத்தேர்தலில் பெரும் தோல்வியை சந்திக்கும் என்றும், அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் முக்கால்வாசிப்பேர் தோல்வியை சந்திப்பார்கள் என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் மூலமாக தெரியவந்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Find Out Now and Electoral Calculus என்னும் ஆய்வமைப்பு, 18,000 பிரித்தானியர்களிடையே சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வில், ரிஷி கட்சியினரின் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தங்கள் இருக்கைகளை தக்கவைத்துக்கொள்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அவகியில் ரிஷியின் கன்சர்வேட்டிவ் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என்றும், கேபினட் அமைச்சர்களில் 17 அல்லது 18 பேர் பதவி இழக்க நேரிடும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில், கேர் ஸ்டாமரின் லேபர் கட்சி, 452 இருக்கைகளுடன் பெரும் வெற்றி பெறும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. லேபர் கட்சிக்குக் கிடைக்கவிருக்கும் வெற்றி, 1997இல் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கிடைத்ததைவிட பெரிய வெற்றியாக இருக்கும் என்றும், அக்கட்சிக்கு மக்களிடையே 42 சதவிகித ஆதரவு உள்ளது என்றும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கோ, 22 சதவிகித ஆதரவே உள்ளது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஊடகங்கள், கேர் ஸ்டாமரை பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் என்றே அழைக்கத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version