உலகம்
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1700 வருட பழைய வாய்ந்த முட்டை
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1700 வருட பழைய வாய்ந்த முட்டை
இங்கிலாந்தின் வடக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள பெர்ரிஃபீல்ட்ஸ் எனும் இடத்தில் 1700 ஆண்டுகள் பழமையான முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த முட்டையை ஆய்வு செய்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், முட்டையின் உள்ளே மஞ்சள் கருவும் வெள்ளை கருவும் இன்னும் இயற்கையாக பாதுகாக்கப்படும் விடயமானது ஆச்சரியமளிப்பதாகவும் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் இங்கிலாந்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் எட்வர்ட் பிடுல்ஃப் கருத்து தெரிவிக்கையில், ‘‘மனித தலையீடு இல்லாமல் 1,700 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்கையாகப் பாதுகாக்கப்பட்ட மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக் கருவைக் கொண்ட உலகின் ஒரே முட்டை இதுவாகும்.
மேலும், இந்த முட்டை எந்த பறவை இனத்தினுடையது என்பது பற்றி மேலும் அறிய ஒரு தனித்துவமான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், கென்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்டபோது முட்டைக்குள் உள்ள திரவ உள்ளடக்கத்தை உறுதிப்படுத்த முடிந்தது” என கூறியுள்ளார்.