இந்தியா

பேய்கள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்

Published

on

பேய்கள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்

ராஜஸ்தானில் அமைந்துள்ள குல்தாரா என்ற கிராமத்தில் மனிதர்களுக்குப் பதிலாக பேய்கள் உலா வருகின்றது. மற்றைய கிராமங்களை போல் செல்வச் செழிப்பாக இருந்த இந்த கிராமத்தில் தற்போது பேய்களும் ஆவிகளும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன.

இந்த கிராமத்தில் பாலிவால் பிராமணர்கள் வசித்து வந்துள்ளார்கள். இங்கு வசித்த மனிதர்கள் எங்கே சென்றார்கள்? ஏன் இந்தக் கிராமம் பேயின் ஆட்சியாக மாறியது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

குல்தாரா என்ற கிராமத்தில் வசித்த மக்களுக்கு மந்திரவாதி ஒருவர் சாபம் கொடுத்ததாகவும் உள்ளூர் பண்ணையாரால் கிராம மக்கள் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டதாகவும் ஒரு சிலர் கூறுகின்றனர்.

அன்றைய நாட்களில் இருந்து பேய்களின் கிராமமாக குல்தாரா மாறிவிட்டதாகவும், கிராமத்தில் உள்ள மக்களே இங்கு பேய்களாக வருவதாகவும் பலர் கூறுகின்றனர்.

இந்த கிராமமானது ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் நகரத்திலிருந்து 17கி.மீ தொலைவில் காணப்படுகிறது.

300 வருடங்களுக்கு முன்பு வரை ஜெய்சால்மர் அரசாங்கத்தின் கீழ் இது இருந்துள்ளது. 1291 ஆம் ஆண்டு பாலிவால் பிராமணர்களால் இந்த கிராமமானது நிறுவப்பட்டுள்ளது.

ஒரு நாள் திடீரென்று கிராமத்தில் வசிக்கும் அனைத்து மக்களும் இருளில் மாயமாகியுள்ளனர்.

கொடுமைக்கார பிரதம மந்திரியாக இருந்த ஒருவர், அக்கிராமத்தின் தலைவரின் மகளை விரும்பியுள்ளான். அவளை திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளான்.

இதனை ஒத்துக்கொள்ளாத கிராம மக்கள், தங்கள் கிராமத்தை விட்டு இருளில் மறைந்துள்ளார்கள். அவர்கள் செல்வதற்கு முன்பு இந்தக் கிராமத்தில் இனி யாரும் வசிக்க கூடாது என சாபமிட்டுச் சென்றுள்ளார்கள்.

பின் இந்த கிராமத்தின் பெயரை யாரும் கேட்டாலும் அது பேய் கிராமம் என பயப்படுவார்கள். தற்போது இணையத்தளத்தில் உலகம் முழுவதும் குல்தாரா கிராமம் பிரபலம் அடைந்து வருகிறது.

மேலும் இது தற்போது சுற்றுலா தளமாக மாற்றுவதற்காக 2015-ம் ஆண்டு இப்பகுதியை மேம்படுத்த ராஜஸ்தான் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

யார் இங்கு சென்றாலும் மாலை 6 மணிக்கு மேல் அங்கு இருக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஏனென்றால் இரவானால் பேய்கள் உலாவுவதாக மக்களால் நம்பப்படுகின்றது.

Exit mobile version