உலகம்

குழந்தைகள் பிறந்த திகதியில் லொட்டரி டிக்கெட் வாங்கியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்! அரபு நாட்டில் கோடீஸ்வரரான இந்தியர்

Published

on

குழந்தைகள் பிறந்த திகதியில் லொட்டரி டிக்கெட் வாங்கியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்! அரபு நாட்டில் கோடீஸ்வரரான இந்தியர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர் ஒருவர் 33 கோடி லொட்டரியில் வென்றுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த ராஜீவ் அரிக்காட் என்ற நபர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள AI Ain -யில் கட்டிடக்கலை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

லொட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கமுடைய ராஜீவ், மூன்று ஆண்டுகளாக The Big Ticket அபு தாபி வாராந்திர குலுக்கல் லொட்டரியில் மூன்று ஆண்டுகளாக பங்கேற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் தனது குழந்தைகளின் பிறந்த திகதிகளைக் கொண்ட லொட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய டிக்கெட்டுக்கு 33 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

அதாவது 7 மற்றும் 13 ஆகிய எண்கள் இடம்பெற்றிருக்கும் டிக்கெட்டை ராஜீவ் வாங்கினார். முன்னதாக, அதே எண்களுடன் ஒரு மில்லியன் திர்ஹம்களை வெல்வதை ராஜீவ் தவறவிட்டார். ஆனால், இம்முறை அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

இதுகுறித்து ராஜீவ் அரிக்காட் கூறுகையில், ‘நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக AI Ain-யில் வசிக்கிறேன். கடந்த 3 ஆண்டுகளாக டிக்கெட் வாங்குகிறேன். ஆனால் லொட்டரியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.

இம்முறை நானும் என் மனைவியும் 7 மற்றும் 13 எண்கள் கொண்ட டிக்கெட்டுகளைத் தேர்ந்தெடுத்தோம். இது எங்கள் குழந்தைகளின் பிறந்த திகதிகள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, அதே கலவையுடன் ஒரு Whisker மூலம் ஒரு மில்லியன் திர்ஹம்ஸை நான் தவறவிட்டேன். ஆனால் இந்த முறை நான் அதிர்ஷ்டசாலி’ என தெரிவித்துள்ளார்.

Exit mobile version