உலகம்

காசாவின் வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன் பலி

Published

on

காசாவின் வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன் பலி

ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் (Ismail Haniyeh) மகன் ஹாசெம் இஸ்மாயில் ஹனியேவின் (Ilazem Ismail Ilaniyeh) இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் போது 22 வயதான ஹாசெம் என்ற கல்லூரி மாணவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் முன்னரே ஹனியே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கடந்த அக்டோபர் 7ஆம் திகதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், 125 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் இப்போரில் இஸ்ரேலிய இராணுவ படை பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் மறைந்திருப்பதாக சந்தேகிக்கும் இடங்களில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version