உலகம்

மியன்மாரில் கட்டாயமாக்கப்பட்டுள்ள இராணுவ சேவை சட்டம்

Published

on

மியன்மாரில் கட்டாயமாக்கப்பட்டுள்ள இராணுவ சேவை சட்டம்

மியன்மாரில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் இராணுவ சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது மியன்மாரில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.

இந்நிலையில், கடந்த கால இராணுவ அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட 2010 மக்கள் இராணுவ சேவைச் சட்டத்தின் கீழ் 18 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட அனைத்து ஆண்களும், 18 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட இளம் பெண்களும் குறைந்தபட்சம் 02 வருடங்கள் இராணுவ கட்டளையின் கீழ் கடமையாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், தேசிய அவசர காலங்களில் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து மியான்மர் இராணுவத்தில் இருந்து 14 ஆயிரம் வீரர்கள் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version