உலகம்

விலங்குணவை உட்கொள்ளும் மக்கள் : காசாவில் அவல நிலை

Published

on

விலங்குணவை உட்கொள்ளும் மக்கள் : காசாவில் அவல நிலை

காசாவின் வடக்கு பகுதிக்கு உதவிகள் அனுப்புவதை தொடர்ந்து தடுத்துவரும் இஸ்ரேல் நிர்வாகத்தால், அங்குள்ள மக்கள் கால்நடை தீவனத்தில் உயிர்வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிறுவர்கள் பல நாட்கள் உணவின்றி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குடிநீருக்காகவும் பிற தேவைகளுக்காவும் மக்கள் நிலத்தடி நீரை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

எந்த உதவிகளும் பெற முடியாமல் சுமார் 300,000 மக்கள் வடக்கு பகுதிகளில் சிக்கியுள்ளதாகவும், பஞ்சம் ஏற்படும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவதாகவும் ஐ.நா எச்சரித்துள்ளது.

அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 14 சதவிகிதம் அளவுக்கு உணவு உதவிகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஜனவரி மாதம் 56 சதவிகிதமாக அது அதிகரித்துள்ளது என்றே கூறப்படுகிறது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டால் மட்டுமே உணவு உட்பட உதவிகள் தங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Exit mobile version