உலகம்

அரபு நாடொன்றில் முதன்முறையாக திறக்கப்படும் இந்து கோவில்

Published

on

அரபு நாடொன்றில் முதன்முறையாக திறக்கப்படும் இந்து கோவில்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இந்து ஆலயம் ஒன்று திறக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கோவில் எதிர்வரும் 14ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாரம்பரிய இந்து முறைப்படி கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் 108 அடி உயரமும் 180 அடி அகலமும் கொண்டதாகவும், ஆலய மைதானம் 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரகங்களை குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோயிலாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட கட்டிடத்தில் 10,000 பேர் வரைக்கும் செல்லக்கூடியதாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version