உலகம்

நாம் தமிழர் கட்சிக்காக லட்சங்களில் சம்பளம் பெறும் வெளிநாட்டு வேலையை தூக்கியெறிந்த பெண்: யார் இவர்?

Published

on

நாம் தமிழர் கட்சிக்காக லட்சங்களில் சம்பளம் பெறும் வெளிநாட்டு வேலையை தூக்கியெறிந்த பெண்: யார் இவர்?

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பெண்ணை பற்றிய தகவலை பார்க்கலாம்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் தொகுதி வாரியாக அறிவித்து வருகிறார். அந்தவகையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மரிய ஜெனிஃபர் (42) என்பவர் போட்டியிடவுள்ளார்.

இவர், கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் BEComputer Science, சென்னையில் உள்ள ICFAI கல்லூரியில் MBA மார்கெட்டிங் படித்துள்ளார்.

பின்னர், தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டெலிகாம் இண்டஸ்ட்ரியில் விற்பனை மற்றும் வணிக அபிவிருத்தி அதிகாரியாக 17 வருடம் பணிபுரிந்துள்ளார். அதோடு ஐக்கிய அரபு அமீரகம் உள்பட பல்வேறு நாடுகளில் பணிபுரிந்துள்ளார்.

தற்போது, இவர் நாம் தமிழர் கட்சிக்காக லட்சங்களில் சம்பளம் பெறக்கூடிய வெளிநாடு வேலைகளை விட்டு விட்டு வந்துள்ளார். இவரின் கணவர் சாலமன் தீபக். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த சமயத்தில் தான் மரிய ஜெனிஃபர் அரசியலுக்கு நுழைந்துள்ளார்.

கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் வலிமையுடன் இருக்கும். ஆனால், தற்போது நாம் தமிழர் கட்சியும் அங்கு வலிமையாகி வருகிறது.

Exit mobile version