உலகம்
ஜேர்மனியில் 1000 விமான சேவைகள் பாதிப்பு
ஜேர்மனியில் 1000 விமான சேவைகள் பாதிப்பு
ஜேர்மனியில் உள்ள லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனால் 1000 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் 1 இலட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சுமார் 27 மணி நேரம் இந்த போராட்டம் நீடிக்கும் என விமான தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமான லுப்தான்சா ஐரோப்பாவில் 2-வது பெரிய விமான நிறுவனமாக திகழ்கிறது.
இதனால் அமெரிக்கா, கனடா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய லுப்தாப்சா விமான பயணிகளும் நெருக்கடிக்கு உள்ளாகினர்.