உலகம்

3 விநாடிகளில் பொருட்களை Review செய்யும் பெண் ஒருவர்.., வாரம் மட்டுமே ரூ.120 கோடி வருமானம்

Published

on

3 விநாடிகளில் பொருட்களை Review செய்யும் பெண் ஒருவர்.., வாரம் மட்டுமே ரூ.120 கோடி வருமானம்

வெறும் 3 விநாடிகளில் பொருட்களுக்கு Review செய்யும் சீன பெண் ஒருவர் வாரத்திற்கு மட்டுமே ரூ.120 கோடி வருமானம் பெறுகிறார்.

சீனாவை சேர்ந்த சமூக ஊடக பிரபலம் ஜெங் ஜியாங் ஜியாங் (Zheng Xiang Xiang). இவர் சமூக ஊடகங்களில் சாதாரணமாகவே அறியப்பட்டார். பின்னர், தனது தனித்துவமான திறமையின் மூலம் 50 லட்சத்துக்கும் மேல் Followers கொண்டுள்ளார்.

TikTok மற்றும் Instagram -க்கு நிகரான சீனாவின் சமூக ஊடகங்களில் ஒன்று டோயின் (Douyin). இதில், பல்வேறு பொருட்களுக்கு வேகமாக மதிப்பாய்வு செய்கிறார் Zheng Xiang Xiang.

இதில் Review செய்வதன் மூலம் வாரத்துக்கு இந்திய மதிப்பில் ரூ.120 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார். இவர், பிரபலங்கள் பயன்படுத்தும் உத்தியை தான் பின்பற்றுகிறார். ஆனால், அவர்களிடம் இருந்து கால அவகாசத்திலிருந்து மட்டும் வேறுபடுகிறார்.

அதாவது, ஒரு பொருளுக்கு வெறும் 3 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்கிறார். பின்னர், அந்த பொருளை தூக்கி எறிந்து விட்டு அடுத்த பொருளைக் காட்டுகிறார். இவரின் வேகம் மற்றும் பேச்சின் சுவாரசியத்துக்காக வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தவர்கள், அவர் Review செய்யும் பொருட்களாலும் ஈர்க்கப்பட்டு வாங்க ஆரம்பித்தனர்.

இதனால் பல நிறுவனங்கள் தங்களுடைய பொருட்கள் வாடிக்கையாளர்களிடம் சென்றடைய காத்திருக்கின்றன. அதற்கான கட்டணத்தையும் கொடுக்க தயாராக உள்ளன.

Exit mobile version