உலகம்

பயணிகளின் உடைமைகளுடன் பயணிகளின் எடையையும் பரிசோதித்த விமான நிறுவனம்; ஒரு சுவாரஸ்ய செய்தி…

Published

on

பயணிகளின் உடைமைகளுடன் பயணிகளின் எடையையும் பரிசோதித்த விமான நிறுவனம்; ஒரு சுவாரஸ்ய செய்தி…

மேலை நாட்டு நகைச்சுவை ஒன்று உண்டு. எடை பார்க்கும் இயந்திரம் ஒன்றில் தங்கள் எடையை சோதிப்பதற்காக சிலர் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்களாம்.

அது ஒரு பேசும் இயந்திரம். அதாவது, ஒருவர் இயந்திரத்தின் மீது ஏறியதும், ’உங்கள் எடை 50 கிலோ’ என்பது போல அந்த இயந்திரத்திலிருந்து ஒலி வரும் வகையில் அந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அப்போது, வரிசையில் சற்றே உடல் பருமனான ஒருவர் நின்றுகொண்டிருந்திருக்கிறார். அவரைக் கண்ட சிலர், இவரது எடை எவ்வளவு இருக்கும் பார்க்கலாம் என இயந்திரம் கூறப்போவதைக் கேட்க ஆவலுடன் காத்திருந்திருக்கிறார்கள்.

அவரது முறை வந்ததும், அவர் இயந்திரத்தில் ஏற, இயந்திரமோ, ’One at a time please’ என்று கூறிவிட்டதாம். அதாவது, ஒருவர் மட்டும் இயந்திரத்தில் ஏறுங்கள் என்பது அதன் பொருள். இது உடல் பருமனானவர்களை கேலி செய்வதற்காக கூறப்பட்ட நகைச்சுவை அல்ல!

அதாவது, இன்றைய காலகட்டத்தில், மக்கள் தங்கள் உடல் எடையை மற்றவர்கள் அறிந்துகொள்வதை விரும்பமாட்டார்கள்தானே!

ஆனால், விமான நிறுவனம் ஒன்று, தனது விமானத்தில் ஏறுவோரின் உடல் எடையை சோதிக்க இருப்பதாகவும், அதற்கு சம்மதிப்பவர்கள் வரலாம் என்றும் கூறியுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால், ஒன்று இரண்டு அல்ல, 600 பேர் தங்கள் உடல் எடையை சோதிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.

அதாவது, ஒரு விமானத்தில் இவ்வளவு எடைதான் ஏற்றவேண்டும் என்னும் வரம்பு உள்ளது. எனவே, விமானம் புறப்படும் முன் பயணிகளின் உடைமைகளை எடைபோட்டு அவை மொத்தம் எவ்வளவு எடை உள்ளன என்பதை கணக்கிடுவார்களாம்.

பயணிகளைப் பொருத்தவரை அப்படி எடைபோடமுடியாது. ஆகவே, ஒரு ஆள் இவ்வளவு எடை இருப்பார் என தோராயமாக கணித்து, அவர்களையும், அவர்கள் உடைமைகளையும் சேர்த்து, விமானத்தின் எடை என்ன என்பதைக் கணக்கிடுவார்களாம்.

இந்நிலையில், உண்மையாகவே பயணிகள் தங்கள் உடல் எடையை கணக்கிட அனுமதிப்பார்களா என்பதை அறிந்துகொள்வதற்காக பின்லாந்து விமான நிறுவனமான Finnair ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளைக் கோர, ஆச்சரியப்படும் வகையில், 600 தன்னார்வலர்கள் தங்கள் உடல் எடையை சோதிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்கள்

Helsinki விமான நிலையத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனையில் பங்கேற்ற அனைவருக்கும் சிறிய பரிசொன்றை வழங்கியுள்ளது விமான நிறுவனம்.

ஆனால், அந்த சோதனையில் பங்கேற்ற பயணிகளின் பெயரையோ, முன்பதிவு எண்ணையோ விமான நிறுவனம் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version