உலகம்

அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஷால்.., விஜயுடன் நேரடி மோதல்

Published

on

அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஷால்.., விஜயுடன் நேரடி மோதல்

நடிகர் விஜயைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் கட்சி தொடங்க இருப்பதாக விஷால் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

நடிகர் விஜய் ”தமிழக வெற்றி கழகம்” என தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். இதனை அடுத்து வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த இரண்டு வருடங்கள் கட்சியைப் பலப்படுத்தும் வேலையை செய்ய இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து, தற்போது ஒப்பந்தமாகியுள்ள 2 படங்களை மட்டும் முடித்துக் கொடுத்துவிட்டு விரைவில் சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஷாலும் விரைவில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் தற்போது மக்கள் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அதனைத் தீர்த்தும் வருகிறார்.

தனது ரசிகர் மன்றங்களை விஷால் மக்கள் நல இயக்கம் எனப் பெயர் மாற்றம் செய்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் பூத் கமிட்டிகளையும், பொறுப்பாளர்களையும் நியமித்து இருக்கிறார்.

அடுத்தது நேரடி அரசியல் தான் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வந்த விஷால், விரைவில் கட்சி துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியை அறிவித்தவுடன் வர இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், 2026-ல் நடிகர் விஜயும், விஷாலும் நேரிடையாக மோதிக் கொள்ளப் போவதாக ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

Exit mobile version