இந்தியா

சீன புறாவை எட்டு மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்த இந்தியா

Published

on

சீன புறாவை எட்டு மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்த இந்தியா

எட்டு மாத காவலுக்குப் பிறகு இந்திய பொலிஸார் புறா ஒன்றை விடுவித்துள்ளனர்.

சீன உளவாளி என்று சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் அது விடுவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மும்பை புறநகர் பகுதியான செம்பூரின் பிர் பாவ் ஜெட்டியில் இந்த பறவை பிடிபட்டது.

இதன்போது அதன் சிறகுகளில் “சீன எழுத்துக்களில் எழுதப்பட்ட செய்திகளுடன்” அதன் காலில் இரண்டு மோதிரங்கள் கட்டப்பட்டிருந்ததாக இந்திய செய்தித்தாளான டைம்ஸ் ஒஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

இதனையடுத்து புறாவை பிடித்த பொலிஸார் அதனை மும்பையில் உள்ள விலங்குகளுக்கான வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் அந்த பறவைக்கு எதிராக உளவு பார்த்ததாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

எனினும் விசாரணையின்போது தாய்வானிலிருந்து இருந்து தப்பித்து இந்தியாவுக்கு வந்த திறந்த நீர் பந்தயப் பறவையே அது என்பதை இந்திய பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இதற்கிடையில் பீப்பள் ஃபோர் தி எத்திக்கல் ட்ரீட்மென்ட் ஒஃப் எனிமல்ஸ் (people for the ethical treatment of animals) என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் பிரதிநிதி, புறாவை விடுவிக்கக் கோரி பொலிஸாரிடம் கோரிக்கையை முன்வைத்தார்.

இந்தநிலையில் குறித்த பறவை வைத்தியசாலையில் இருந்து விலங்குகள் வதை தடுப்புக்கான நிலையத்துக்கு மாற்றப்பட்டது, இதனையடுத்து மருத்துவர்கள் அந்த புறாவை விடுவித்தனர்.

உளவு பார்க்கும் பறவையை இந்திய பொலிஸார் சந்தேகிப்பது இது முதல் முறை அல்ல. 2020 ஆம் ஆண்டும் உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் புறாவை காஸ்மீர் பொலிஸார் பிடித்தனர்.

அது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிக இராணுவமயமாக்கப்பட்ட எல்லையில் பறந்தபோது பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது.

அதேநேரம் 2016 ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட புறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் சிறையில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version