உலகம்

ஆங்கிலக்கால்வாயில் உயிரிழப்போர் எண்ணிக்கையை குறைப்பதற்கு பதில் அதிகப்படுத்திய பிரெஞ்சு பிரித்தானிய ஒப்பந்தம்…

Published

on

ஆங்கிலக்கால்வாயில் உயிரிழப்போர் எண்ணிக்கையை குறைப்பதற்கு பதில் அதிகப்படுத்திய பிரெஞ்சு பிரித்தானிய ஒப்பந்தம்…

ஆங்கிலக்கால்வாயைக் கடந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தால், நன்மைக்கு பதில் தீமையே அதிகம் நடந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோரை, பிரான்ஸ் பகுதியிலேயே கட்டுப்படுத்துவதற்காக, பிரான்ஸ் தரப்புக்கு மில்லியன் கணக்கில் பணம், பிரெஞ்சு பொலிசாருடன் இணைந்து ரோந்து என பல நடவடிக்கைகள் துவக்கப்பட்டன.

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம், சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் இரு நாடுகளும் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டன.

ஆனால், இருநாடுகளும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக ஒப்பந்தங்கள் செய்துகொண்டபின், எதிர்பாராதவிதமாக, எதிர்மறை விளைவுகள் உருவாகியுள்ளன.

அதாவது, 2023இல், இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்ளப்பட்டதற்கு முன்பு ஆங்கிலக்கால்வாயில் தண்ணீரில் முழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையைவிட, ஒப்பந்தத்துக்குப் பின் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்கிறது ஆய்வறிக்கை ஒன்று.

Deadly Consequences of the New Deal to Stop the Boats என்னும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஆய்வறிக்கை, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் புலம்பெயர்வோரை கட்டுப்படுத்துவதற்காக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு முன்பும் பின்புமான தரவுகளை ஒப்பிட்டு நோக்குகிறது.

2022ஆம் ஆண்டு ஆங்கிலக்கால்வாயில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆறு. அதுவே, ஒப்பந்தத்திற்குப் பின், அதாவது 2023ஆம் ஆண்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை, 13.

ஆக, பொலிசார் அதிகம் நடமாடுவதால் பயந்து aதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்வோர், வேகவேகமாக படகுகளில் ஏறிச் செல்லமுயலும்போது, ரப்பர் படகுகளில் முழுமையாக காற்றை நிரப்பாமலே படகுகள் புறப்படுவது போன்ற காரணங்களால் விபத்துக்கள் அதிகமாவதாகவும், உயிரிழப்பு அதிகமாவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஆக, புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்துக்கும், ஆங்கிலக்கால்வாயில் மூழ்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளது அந்த ஆய்வறிக்கை.

Exit mobile version