உலகம்

பின்லாந்து எல்லையில் புடினுக்கு ரகசிய குடியிருப்பு., வெளியான காணொளி ஆதாரம்

Published

on

பின்லாந்து எல்லையில் புடினுக்கு ரகசிய குடியிருப்பு., வெளியான காணொளி ஆதாரம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு பின்லாந்து எல்லையில் ரகசிய குடியிருப்பு இருப்பதாக காணொளி ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆவண மையம் அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மாஸ்கோ டைம்ஸ் இது குறித்து ஒரு கட்டுரையை வெளியிட்டது. இந்த மர்ம இடத்தின் காணொளியும் வெளியாகியுள்ளது.

Kareliaவில் உள்ள Lake Ladoga தேசிய பூங்காவில் புடினின் ரகசிய தளம் இருப்பதாக நம்பப்படுகிறது.

Putin’s Secret Country House என்று அழைக்கப்படும் அந்த சொகுசு எஸ்டேட்டின் காணொளி Youtubeல் வெளியிடப்பட்டது.

Marjalahti Bay-வில் அமைந்துள்ள உள்ள இந்த கட்டிடம் மிகவும் நவீன பாணியில் கட்டப்பட்டது.

வீட்டில் இரண்டு helipadகள் உள்ளன. படகு சவாரிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாட்டிறைச்சி உற்பத்திக்காக பண்ணை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

Interior Decoration-க்கு மிகவும் விலையுயர்ந்த கற்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

புடினின் வீட்டிற்கு எதிரே நீர்வீழ்ச்சி இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. anti-aircraft system-உடன் கட்டப்பட்ட இடமும் உள்ளது.

ஜனாதிபதி புடின் தனது ஓய்வு நிலைக்கு அருகில் ஒரு ரகசிய இல்லத்தை கட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு பாதுகாப்பிற்காக Federal Guard Service பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், அருகிலுள்ள தீவுகளுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. அனைத்து நுழைவாயில்களும் அடைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடத்தை அடைவதற்கு படகு அல்லது விமானம் மட்டுமே வழி என் கூறப்படுகிறது.

Exit mobile version