உலகம்

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை

Published

on

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய மீன்பிடிக் கப்பலையும் அதிலிருந்த 19 பாகிஸ்தானியர்களையும் இந்திய கடற்படையினர் மீட்டனர்.

இந்திய கடற்படை இரண்டு நாட்களுக்குள் மற்றொரு மாபெரும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கொச்சியில் இருந்து 800 மைல் தொலைவில் கடற்கொள்ளையர்களின் வசம் இருந்த Al Naeemi எனும் ஈரானிய மீன்பிடி கப்பலை மீட்டது.

INS Sumitra என்ற போர்க்கப்பல் மூலம் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

கடத்தப்பட்ட கப்பலில் 19 பாகிஸ்தான் மாலுமிகள் இருந்தனர். அவர்கள் அனைவரையும் மீட்டுவிட்டதாக இந்திய கடற்படை அறிவித்துள்ளது.

மேலும் கப்பலில் இருந்த 11 சோமாலிய கடற்கொள்ளையர்களையும் இந்திய கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

இந்த மீட்பு பணியில் இந்திய கடற்படையின் மரைன் கமாண்டோக்கள் கலந்து கொண்டனர்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய போர்க்கப்பல்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர் எதிர்ப்பு, கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளுக்காக இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ராவை அனுப்பியுள்ளது.

சில நாட்களுக்கு முன், FV Iman என்ற மற்றொரு ஈரானிய மீன்பிடி கப்பல், கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டது. அந்த நேரத்திலும் ஐஎன்எஸ் சுமித்ரா மீட்பு பணியை மேற்கொண்டது.

Exit mobile version