உலகம்

வளைகுடா பகுதியில் பற்றி எரியும் எண்ணெய் கப்பல்

Published

on

வளைகுடா பகுதியில் பற்றி எரியும் எண்ணெய் கப்பல்

செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் வணிக கப்பல்களை குறிவைத்து ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று ஏடன் வளைகுடா பகுதியில் பிரித்தானியாவை சேர்ந்த எண்ணெய்க் கப்பலான எம்.வி. மர்லின் லுவாண்டாவை தாக்கியுள்ளனர்.

இந்த ஏவுகணை தாக்குதல் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் எண்ணெய் கப்பல் தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து எண்ணெய் கப்பலில் இருந்தவர்கள், இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் கப்பலை தொடர்புக்கொண்டு உதவிக்கோரியுள்ளனர்.

இதையடுத்து ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் மீட்பு குழுவினர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

எண்ணெய்க் கப்பலில் 22 இந்தியர்கள் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 23 பேர் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்திய கடற்படை தனது போர்க்கப்பல்களை தயார் நிலையில் நிறுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

வணிகக் கப்பல்களை பாதுகாப்பதிலும், கடலில் மனிதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இந்திய கடற்படை உறுதியுடன் இருப்பதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version