உலகம்

வெளிநாடொன்றில் பெண்ணிடம் அத்துமீறிய இந்தியருக்கு சிறை

Published

on

வெளிநாடொன்றில் பெண்ணிடம் அத்துமீறிய இந்தியருக்கு சிறை

வெளிநாடொன்றில், வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் அத்துமீறிய இந்தியர் ஒருவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் இந்தியரான சிங்காரம் (Singaram Palianeapan, 61) என்ற நபர், தான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள வீடு ஒன்றில் வேலை செய்யும் பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி, அந்தப் பெண் உணவு வாங்கச் சென்றபோது, தேநீர் வாங்கிக்கொள்ளச் சொல்லி அவருக்கு பண்ம் கொடுத்துள்ளார் சிங்காரம்.

அந்தப் பெண் மறுத்தும், அவரை வற்புறுத்தி பணத்தைக் கொடுத்த அவர், பின்னர் தான் வேலை செய்யும் வீட்டுக்கு செல்லப் புறப்பட்ட அந்த பெண்ணை பின்தொடர்ந்துள்ளார்.

லிப்டில் ஏறியதும், சிங்காரம் தனது வீடு இருக்கும் 17ஆவது தளத்தின் பொத்தானை அழுத்த, அந்தப் பெண்ணோ, தான் வேலை செய்யும் வீடு இருக்கும் ஐந்தாவது தளத்தின் பொத்தானை அழுத்த முயன்றுள்ளார். சிங்காரம் அவரை தடுத்துள்ளார்.

லிப்ட் புறப்பட்டதும் அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ளத்துவங்கியுள்ளார் அவர். லிப்ட் 17ஆவது தளத்தை அடைந்ததும், என் கூட வா என அந்தப் பெண்ணை அழைத்துள்ளார் சிங்காரம். அந்தப் பெண் மறுக்கவே, மீண்டும் லிப்டுக்குள் நுழைந்த அவர், 7ஆவது தளத்தில் பொத்தனை அழுத்திவிட்டு, மீண்டும் அந்தப் பெண்ணிடம் அத்துமீறியுள்ளார்.

இந்தக் காட்சிகள் லிப்டிலுள்ள CCTVகமெராவில் பதிவாகியுள்ளன.

அன்றே பொலிசார் சிங்காரத்தைக் கைது செய்ய மறுநாள் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் அவர்.

ஒரு மாதம் கழித்து வேறொரு நபருடன் சண்டையிட்ட சிங்காரம் அவரைத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

சிங்காரத்துக்கு 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

Exit mobile version