உலகம்

ஜேர்மனியில் துவங்கியது ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: ஒரு பில்லியன் யூரோக்கள் இழப்பு…

Published

on

ஜேர்மனியில் ரயில் சாரதிகள் ஆறுநாட்கள் வேலைநிறுத்தத்தைத் துவங்கியுள்ளனர். இதனால், ஒரு பில்லியன் யூரோக்கள் அளவுக்கு இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை, ஜேர்மன் ரயில் சாரதிகள் யூனியன் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், நேற்று, புதன்கிழமை, அதிகாலை 2.00 மணிக்கு வேலை நிறுத்தம் துவங்கியது. அது, வரும் திங்கட்கிழமை மாலை 6.00 மணி வரை நீடிக்கும் என ஜேர்மன் ரயில் சாரதிகள் யூனியன் தெரிவித்துள்ளது.

சில ரயில்கள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் தாங்கள் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள ரயில்கள் இயங்குமா என்பதை முன்கூட்டியே ஒன்றுக்கு இரண்டு முறை உறுதி செய்துகொண்டு ரயில் நிலையம் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த வேலைநிறுத்தத்தால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வேலைநிறுத்தத்தால் ஒரு மில்லியன் யூரோக்கள் அளவுக்கு இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version