உலகம்

பள்ளிகள் மூடப்பட்டு 800 நாட்கள்; ஆப்கானிஸ்தான் சிறுமிகளுக்கு கல்வி வழங்க சர்வதேச அமைப்புகள் கோரிக்கை

Published

on

பள்ளிகள் மூடப்பட்டு 800 நாட்கள்; ஆப்கானிஸ்தான் சிறுமிகளுக்கு கல்வி வழங்க சர்வதேச அமைப்புகள் கோரிக்கை

பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்க தாலிபான்கள் தயாராக வேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சர்வதேச கல்வி தினம் ஜனவரி 24ம் திகதி கொண்டாடப்படுவதால் நேற்று பள்ளியை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, 6ம் வகுப்புக்கு பின் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டில் பெண்களுக்கு கல்வி நிறுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி Roza Otunbayeva, அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர், உலக உணவுத் திட்டம் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் கல்வி மீதான தடையை நீக்குமாறு தாலிபான்களிடம் கேட்டுக் கொண்டதாக ஆப்கானிஸ்தான் ஊடகமான டோலோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அனைவருக்கும் கல்வியை வழங்க தாலிபான்கள் தயாராக இருக்க வேண்டும் என்று சமூக ஊடகங்கள் மூலம் ரோசா ஒடுன்பயேவா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமன்றி முஸ்லிம் உலகிற்கும் கல்வி தேவை என சர்வதேச கல்வி தினத்தில் ஒதுன்பயேவா தெரிவித்தார்.

இஸ்லாத்தில் ஒவ்வொரு நாளும் கல்வி நாள் ஆனால் துரதிர்ஷ்டவசமாக சர்வதேச கல்வி தினத்தன்று ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுகின்றன என்று பெண்கள் உரிமை ஆர்வலர் Tafsir Seyaposh கூறினார். மேலும், தாலிபான்கள் பள்ளிகளைத் திறக்கத் தயாராக வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Exit mobile version