உலகம்

எதிரி நாட்டு வீராங்கனையுடன் கைகுலுக்குவதா? 16 வயது சிறுமியால் வெடித்த சர்ச்சை! பதறிய தந்தை

Published

on

எதிரி நாட்டு வீராங்கனையுடன் கைகுலுக்குவதா? 16 வயது சிறுமியால் வெடித்த சர்ச்சை! பதறிய தந்தை

உக்ரேனிய டென்னிஸ் வீராங்கனை ஒருவர், டென்னில் போட்டியில் ரஷ்ய வீராங்கனைக்கு கைகுலுக்கியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உக்ரைனின் 16 வயது வீராங்கனை Yelyzaveta Kotliar-வும், ரஷ்ய வீராங்கனை Vlada Mincheva-வும் மோதினர்.

இப்போட்டியில் Mincheva 6-2, 6-4 செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். அப்போது உக்ரைன் வீராங்கனை Yelyzaveta, வெற்றி பெற்ற Mincheva-விற்கு கைகுலுக்கினார்.

போர் சூழலில் எதிரி நாட்டின் வீராங்கனைக்கு கைகுலுக்கியதால் இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. உக்ரைன் டென்னிஸ் கூட்டமைப்பு Yelyzaveta-வை கடுமையாக விமர்சித்தது.

ரஷ்ய மற்றும் பெலாரஸ்ய வீரர், வீராங்கனைகளை கைகுலுக்கி வாழ்த்தக்கூடாது என்ற எழுதப்படாத விதியை அவர் மீறியதாக கூறியது.

இதனைத் தொடர்ந்து, தனது செயலுக்கு ‘மிகவும் வருந்துகிறேன்’ என Yelyzaveta Kotliar உடனடி மன்னிப்பு கேட்டார். மேலும், Yelyzaveta Kotliar-யின் தந்தை Konstantin Kotliar அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், தனது மகள் அழுத்தமான சூழ்நிலையில் தெளிவாக சிந்திக்கவில்லை, தானாகவே தனது எதிரியுடன் கைகுலுக்கினார் என்றார்.

அத்துடன், ‘இங்குள்ள சூழ்நிலை அசாதாரணமானது, இது விளையாட்டு வீரர்களுக்கு அதிக அழுத்தத்தை அளிக்கிறது. அவளுக்கு 16 வயதுதான் ஆகிறது, தொழில்முறை மற்றும் இளைஞர் டென்னிஸ் இரண்டின் உச்சமான கிராண்ட்ஸ்லாம் போன்ற பெரிய போட்டிகளில் அவருக்கு அனுபவம் இல்லை’ என தெரிவித்தார்.

அதேபோல், மற்றொரு உக்ரேனிய வீராங்கனை Dayana Yastremska-வும் இளம் வீராங்கனையான Yelyzaveta Kotliar-க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

Exit mobile version