உலகம்

உலகப் புகழ் பெற்ற பாடகர் குழுவை நிறுவிய ஜேர்மானிய பிரபலம் மறைவு…

Published

on

உலகப் புகழ் பெற்ற பாடகர் குழுவை நிறுவிய ஜேர்மானிய பிரபலம் மறைவு…

உலகம் முழுவதும் புகழ் பெற்ற, போனி எம் (BONEY M) பாடகர் குழுவின் பாடல்களை கேட்காதவர்கள் குறைவு எனலாம்.

ட்ரம்மர் பாய், மேரிஸ் பாய் சைல்ட் முதலான கிறிஸ்துமஸ் பாடல்களானாலும் சரி, டிஸ்கோ பாடல்களான ரா ரா ரஸ்புட்டின், டாடி கூல் முதலான பாடல்களானாலும் சரி, போனி எம் குழுவினரின் பாடல்களை கேட்டு ரசிப்பவர்கள் இன்றும் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். யூடியூபில் இந்த பாடல்கள் எல்லாமே மில்லியன் கணக்கில் பார்வைகளையும் சப்ஸ்கிரைபர்களையும் கொண்டுள்ளன.

இந்த போனி எம் பாடகர் குழுவை நிறுவியவர் ஜேர்மானியரான Frank Farian. ப்ளோரிடாவில் வாழ்ந்துவந்த ஃப்ராங்க், தனது 82ஆவது வயதில், அமைதியாக இவ்வுலகை விட்டுக் கடந்துசென்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

போனி எம் குழுவினரில் தலைமைப் பாடகியான Liz Mitchell முதலானோர், ஃப்ராங்க் மறைவுக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்கள்.

ஃப்ராங்கின் மறைவுக்கான காரணம் தெரியாவிட்டாலும், அவர் 2022 ஆம் ஆண்டு இதய அறுவை சிக்கிசை செய்துகொண்டார், அவருக்கு இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமான நிலையிலேயே இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

Exit mobile version