உலகம்

நாளை இந்தியா செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி

Published

on

நாளை இந்தியா செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி

இந்திய குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், நாளை இந்தியா செல்கிறார்.

இந்தியாவின் குடியரசு தினம் ஜனவரி மாதம், 26ஆம் திகதி, அதாவது, நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக மேக்ரான் நாளை இந்தியா செல்கிறார்.

நாளை இந்தியா செல்லும் மேக்ரான், ஆம்பர் கோட்டை, ஜந்தர் மந்தர் மற்றும் ஹவா மஹால் ஆகிய இடங்களை சுற்றிப் பார்க்க உள்ளார்.

முதலில் ஜந்தர் மந்தரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் மேக்ரான், அவருடன் இணைந்து மற்ற இடங்களுக்குச் செல்கிறார்.

பின்னர் ஜெய்ப்பூரிலுள்ள இராம்பாக் அரண்மனையில், மேக்ரானுக்கு இந்திய பிரதமர் மோடி விருந்தளிக்கிறார்.

26ஆம் திகதி, குடியரசு தின கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கவிருக்கும் மேக்ரான் அதைத் தொடர்ந்து பிரெஞ்சு தூதரக ஊழியர்களை சந்திக்கிறார்.

பின்னர், இந்திய ஜனாதிபதி மாளிகையில் மேக்ரானுக்கு வரவேற்பளிக்கப்பட உள்ளது, ஜனாதிபதி மாளிகையில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுடன் அவர் அரசுமுறை விருந்தில் பங்கேற்கிறார்.

மேக்ரான், இந்திய குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் ஐந்தாவது பிரெஞ்சு ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version