உலகம்

பிரித்தானிய பிரதமர் ராஜினாமா செய்ய வலுக்கும் கோரிக்கை

Published

on

பிரித்தானிய பிரதமர் ராஜினாமா செய்ய வலுக்கும் கோரிக்கை

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா செய்யவில்லையென்றால், வரும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடையும் என்று கூறியுள்ளார் அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்.

புலம்பெயர்தல் விவகாரம் பிரித்தானிய அரசியலில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது. சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சியினர் சிலர் துடிக்கிறார்கள்.

அவர்கள் ஆட்டி வைப்பதற்கேற்ப ஆடிக்கொண்டிருக்கும் பிரித்தானிய பிரதமர் ரிஷியால், அவர்களுடைய ஆசையை நிறைவேற்ற முடியவில்லை.

எப்படியாவது, சில மாதங்களுக்குள் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்துவதைத் துவக்கவேண்டும் என திட்டமிட்டிருந்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்குக்கு நாடாளுமன்ற மேலவை முதல் தோல்வியைக் கொடுத்துள்ளது.

ஆம், ருவாண்டா பாதுகாப்பான நாடு என பிரித்தானிய அரசு நிரூபிக்கும்வரை, புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் சட்டம் அமுலுக்கு வராதவகையில், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் வாக்களித்து ரிஷியின் ருவாண்டா திட்டத்தை தாமதப்படுத்திவிட்டார்கள்!

இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா செய்யவில்லையென்றால், வரும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடையும் என்று கூறியுள்ளார் கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான Sir Simon Clarke.

இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், புலம்பெயர்தல் விடயத்தில் அரசு உறுதியாக இல்லாததால், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, முக்கிய வாக்காளர்களை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார் Sir Simon Clarke.

ஆகவே, வரும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிபெறவேண்டுமானால், ரிஷி தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்கிறார் அவர்.

பெரும்பான்மையோரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒருவர்தான் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவேண்டும் என்று கூறும் Sir Simon Clarke, கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குள் நான்காவது தலைவரை தேர்வு செய்வதாக என பயப்படுகிறார்கள் போலிருக்கிறது என்கிறார்.

ஆனால், ஒரு வாரம், ஊடகங்களில் இந்த விடயம் தலைப்புச் செய்தியாவதா அல்லது லேபர் கட்சி ஆட்சிக்கு வந்து நாடு 10 ஆண்டுகளுக்கு Keir Starmerஇன் ஆட்சியில் நாடு வீழ்ச்சியடைவதா? எது மோசம் என கேள்வி எழுப்புகிறார் Sir Simon Clarke.

Exit mobile version