உலகம்

தைவான் தேர்தல் முடிவின் எதிரொலி: போருக்கு தயாராகும் சீனா

Published

on

தைவான் – சீனா முறுகல் நிலை வலுப்பெற்று வரும் நிலையில் தைவானின் தேர்தல் முடிவானது 2025இல் புதிய போரை உருவாக்க கூடும் என பிரித்தானியாவில் உள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.

சீனா – இந்தியா இடையிலான ஆசியவளைய பொருளாதார, அரசியல் போட்டித்தன்மை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போதே அவர மேற்கண்டவாறு கூறினார்.

” சர்வதேச அளவில் சீனா – தைவான் இடையிலான போர் நிலைமையானது 2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் என சர்வதேச வல்லுநர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

அவ்வாறான போர் ஆரம்பமாகும் என்றால் சீனாவின் பொருளாதார பாதையில் பாரிய தாக்கம் ஏற்படுவதோடு, சீனாவின் எண்ணெய் கப்பல்கள் கடலுக்குள் மூழ்கும் நிலை ஏற்படும்” என இராணுவ ஆய்வாளர் அரூஸ் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version