உலகம்
இஸ்ரேலும் ஹமாஸ் போர் : காசாவில் தடைப்பட்ட மனிதாபிமான உதவிகள்
இஸ்ரேல் மேற்கொள்ளும் தொடர் தாக்குதல்கள் காரணமாக காசாவுக்கான மனிதாபிமான உதவிகள் தடைபட்டுள்ளதாக ஐ.நாவின் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
இதனால் பட்டினியில் வாடும் பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், மருந்துகள், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் காசாவுக்குள் அனுப்பப்படுவதும் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காசாவுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பிலும் இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும் இணக்கப்பாடொன்றை எட்டியுள்ளதாக கத்தார் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கத்தார் மற்றும் பிரான்ஸின் தலையீடுடன், ஹமாஸ் இயக்கத்தினரால் பயங்கரவாதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளுக்கு மருந்துகள் வழங்கப்படவுள்ளது.
அத்துடன், நிபந்தனைகளுடன் சில அத்தியாவசிய பொருட்களை காசாவுக்குள் அனுப்ப இஸ்ரேல் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலும் சில பணயக்கைதிகளை பேச்சுவார்த்தையின் மூலம் விடுவிப்பதற்கான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.