உலகம்

பிரித்தானிய பிரதமருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Published

on

பிரித்தானியாவில் தற்போதுள்ள ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி பெரும் தோல்வியை சந்திக்க இருப்பதாக தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 1997 தேர்தல் போன்று மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டு ஆட்சியை இழக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு மத்தியில் பிரித்தானியாவில் தேர்தலை முன்னெடுக்கும் திட்டத்துடன் பிரதமர் ரிஷி சுனக் செயற்பட்டு வருகிறார். இந்த நிலையில், மொத்தமுள்ள 650 ஆசனங்களில் கன்சர்வேடிவ் கட்சி வெறும் 169 எண்ணிக்கை மட்டுமே கைப்பற்றும் என்றும், தொழில் கட்சி 385 ஆசனங்களை வென்று ஆட்சியை கைப்பறும் என்றும் முக்கியமான கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

1997ல் கன்சர்வேடிவ் கட்சி இழந்த ஆசனங்களை விடவும் 2024 தேர்தலில் அதிக எண்ணிக்கையில் இழப்பை எதிர்கொள்ள இருக்கிறார்கள் என்றே கூறப்படுகிறது.

மேலும், 1906க்கு பின்னர் ஆளும் கட்சி ஒன்று மிக மோசமாக மக்கள் ஆதரவை இழப்பதும் இந்த முறை தான் என்றும் கூறப்படுகிறது.

மொத்தம் 14,000 பிரித்தானிய மக்கள் YouGov முன்னெடுத்த கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டுள்ளனர். நவம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 19 சதவிகித புள்ளிகள் பின்தங்கியுள்ளதாகவே தெரியவந்தது.

ஆனால், முந்தைய தேர்தலின் போதும் நூற்றுக்கணக்கான கருத்துக்கணிப்புகள் முன்னெடுக்கப்பட்டும், அவை அனைத்தும் பொய்யானதாக பிரதமர் ரிஷி சுனக் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version