உலகம்
செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
செங்கடல் வழியாக செல்லும் வணிகக் கப்பல்கள் மீது ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதால், உலகச் சந்தை கடுமையாகப் பாதிக்கப்படும் என உலகப் பொருளாதார மன்ற தலைவர் எச்சரித்துள்ளார்.
உலக பொருளாதார மன்றத்தின் 45வது வருடாந்த கூட்டம் சுவிட்சர்லாந்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக இந்தியா உள்ளிட்ட எண்ணெய் இறக்குமதி நாடுகளில் எண்ணெய் விலை உயரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு விலை உயர்வு ஏற்பட்டால் இலங்கையிலும் அதன் தாக்கம் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
இந்த விலை உயர்வு 10 முதல் 20 அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் என சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலைமையை தவிர்க்க ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் விரைவாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.