உலகம்

வயிற்றுவலியுடன் வீடு திரும்பிய ஒன்பதாம் வகுப்பு மாணவி: மருத்துவமனையில் தெரியவந்த அதிர்ச்சித் தகவல்

Published

on

ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருத்தி, வயிற்றுவலியுடன் பள்ளியிலிருந்து வீடு திரும்ப, மருத்துவமனையில் அனைவருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

கர்நாடகா மாநிலத்தில், அரசு உண்டுறை பள்ளி ஒன்றில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருத்தி, வயிற்றுவலியுடன் வீடு திரும்ப, அவளது பெற்றோர் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் அவளுக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த 14 வயது மாணவி 8 மாதங்கள் கர்ப்பமாக இருந்தது தெரியவரவே, அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அந்தக் குழந்தையை வெளியே எடுத்தனர். அந்த மாணவியும், குழந்தையும் நலமாக உள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார் என்பதைக் கண்டறிவதற்காக பொலிசார் அவளிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவள் தனது சீனியரான ஒரு மாணவன்தான் தனது கர்ப்பத்துக்குக் காரணம் என கூறியுள்ளாள்.

பொலிசார் அவனிடம் விசாரித்தபோது அவன் அதை மறுத்துள்ளான். மீண்டும் அந்த மாணவியிடம் விசாரிக்கும்போது, மற்றொரு மாணவனின் பெயரை அந்த மாணவி கூறியுள்ளாள்.

ஆகவே, அவளது கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பதைக் கண்டறிய பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இதற்கிடையில், படிக்க அனுப்பிய மகள், பிள்ளையுடம் திரும்பி வந்ததால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள மாணவியின் பெற்றோருக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

Exit mobile version