உலகம்

இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

Published

on

இந்தோனேஷியாவில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகலெங்கா தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் நேற்று (05.01.2023) குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பல பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் தொடருந்து பெட்டிகள் உடைந்து அருகில் உள்ள வயல்வெளியில் விழுந்துள்ளதாகவும், அந்த பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்ட போது தொடருந்தில் 478 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் விபத்தில் பணியாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 28 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தொடருந்தில் 106 பயணிகளும், துரங்காவில் 54 பயணிகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் அரசு போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version