உலகம்

தென் கொரியா மீது வட கொரியா திடீர் தாக்குதல்: போர் மூளும் பீதியில் மக்கள்

Published

on

தென் கொரியாவிற்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியை நோக்கி வடகொரியா ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது.

வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், இன்று காலை 9 மணியளவில் தென் கொரியாவிற்கு சொந்தமான யோன்பியோங் தீவுக்கு அருகில் வடகொரியா ஷெல் (ஏவுகணை அல்லது பீரங்கி குண்டு) தாக்குதலை நடத்தியுள்ளது.

கிடைத்துள்ள தகவலின் படி, மஞ்சள் கடல் பகுதியில் உள்ள தென் கொரியாவுக்கு சொந்தமான Yeonpyeong மற்றும் Baengnyeong தீவுகளுக்கு இடையே வட கொரியா கிட்டத்தட்ட 200 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கும் சூழல் உருவாகி இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இருப்பதுடன், தங்கள் நாட்டின் எல்லைப் பகுதியில் தென் கொரியா பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.

மேலும் வட கொரியாவின் இந்த அத்துமீற செயலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது.

இதற்கிடையில் தீவு பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தென் கொரிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version