உலகம்
கொல்லப்பட்டார் ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர்
லெபனானின் தெற்கு பெய்ரூட்டில் நடந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி கொல்லப்பட்டதாக சர்வேதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் லெபனானை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தவில்லை என்றும், இந்த கொலை ஒரு தந்திரோபாய நடவடிக்கை தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், ஹமாஸ் அலுவலகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஹமாஸ் அதிகாரிகளுக்கும் லெபனான் முஸ்லிம் குழுவிற்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த தாக்குதலில் நான்கு பாலஸ்தீனியர்களும் மூன்று லெபனானியர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காசாவில் கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 22000ஐ கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.