உலகம்
உடல் பாகங்கள் தெரியும்படி உடையணிந்த மனைவி..கழுத்தறுத்து கொன்ற காதல் கணவர்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் அரைகுறையாக ஆடை அணிந்ததால், இளைஞர் ஒருவர் தனது காதல் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவின் ராம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவன் (25). இவரும் ஜோதி (22) என்ற பெண்ணும் காதலித்து வந்ததைத் தொடர்ந்து, இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
கணவன் – மனைவிக்குள் உடை விடயத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஜோதி மார்டன் உடைகளை அணிந்து வந்துள்ளார். ஆனால், அவர் அரைகுறையாக ஆடை அணிவதாக ஜீவன் அவருடன் சண்டையிட்டுள்ளார்.
எனினும், ஜோதி அவரது பேச்சை கேட்காமல் மாடர்ன் உடைகளை அணிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன் தினம் ஜோதி தனது கணவருக்கு பிடிக்காத வகையில் ஆடையணிந்து வெளியே கிளம்பியுள்ளார்.
அதனை ஜீவன் கண்டித்தும் ஜோதி அதை பொருட்படுத்தவில்லை. அதன் பின்னர் ஜோதியை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதாக கூறி ஜீவன் கூறி வெளியே கூட்டி சென்றுள்ளார்.
அவர் வனப்பகுதிக்கு மனைவியை அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோதியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து ஜோதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ததுடன் தப்பியோடிய ஜீவனை தேடி வருகின்றனர்.