உலகம்

3 ஏவுகணை சோதனைகளை நடத்த காத்திருக்கும் வடகொரியா

Published

on

இந்த ஆண்டில் (2024) ஆண்டில் மேலும் 3 ராணுவ உளவு செயற்கைக்கோள்களை ஏவ உள்ளதாக வடகொரியா ஜனாதிபதி கிம்ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதங்கள், நவீன ஆளில்லா போர் உபகரணங்களை கட்டமைத்து மிகப்பெரிய போர் பதிலடி திறன்களை பெறுவதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்க சரியான இராணுவ தயார் நிலையை பெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து வரும் நிலையில், தென்கொரியா தன்னை பாதுகாத்துக் கொள்ள அமெரிக்காவுடன் நட்பு வைத்துள்ளது.

அமெரிக்கா- தென்கொரியா இணைந்து எப்போது வேண்டுமென்றாலும் வடகொரியா மீது போர் தொடுக்கலாம் என வடகொரியா ஜனாதிபதி கிம்ஜாங் உன் நினைக்கிறார்.

இதனால் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பை முறியடிக்க, தொடர்ந்து தயார் நிலையில் இருக்கும்படி வடகொரிய இராணுவத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக வடகொரியா ஏவிய இராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவியமைக்கு தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version