உலகம்
விஜயகாந்த் தன் மரணத்தை முன்பே அறிந்திருந்தார்: பயில்வான் ரங்கநாதன்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்பே தன் இறப்பை அறிந்திருந்தார் என நேர்காணல் ஒன்றில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது 71வது வயதில் காலமானார். அவரது மரணம் திரையுலகினர் மட்டுமன்றி பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் விஜயகாந்தின் இறப்பு தன்னை பாதித்ததாக பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் நேர்காணல் ஒன்றில் கூறுகையில், ‘பல நடிகர்கள் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள். அதில் கேப்டனும் ஒருவராக இறந்தது அதிர்ச்சி அளிக்கிறது.
தன்னுடைய இறப்பை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கேப்டன் தன்னுடைய மனைவியை கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்துவிட்டார்.
அது தான் நமக்கு தெரிந்த தகவல். இப்போது சூழலில் பிரேமலதாவை அவ்வாறு ஏற்றுக் கொள்வது தொண்டர்களுக்கு கடினமாக இருக்கும்.
அதனால் தான் விஜயகாந்த் தன் இறுதிப்பயணத்தை தொடங்குவதற்கு முன்பே, அரசியல் பயணத்தில் தன் மனைவியை ஒரு பொறுப்பான பதவியில் வைத்துவிட்டு சென்றிருக்கிறார். அப்படித்தான் நாம் நினைக்க முடியும்’ என்றார்.
மேலும் அவர், ‘நடிகர் விஜய் அழுததை முதல் முறையாக பார்த்தேன். எம்ஜிஆர் மறைந்தபோது அவரது வாரிசு போல் விஜயகாந்த் இருந்தார். ஆனால் அவரது மறைவு எம்ஜிஆரின் இறப்பு எவ்வளவு பாதித்ததோ அவ்வளவு பாதித்தது.
சின்ன எம்ஜிஆரை திரையுலகம் இழந்துவிட்டது. விஜயகாந்த் தன்னுடைய கட்சியையும், குடும்பத்தையும் காப்பாற்றுவதற்கு வசதி வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்’ எனவும் தெரிவித்துள்ளார்.