உலகம்

காசாவில் தொடரும் யுத்தம் : ஹமாஸ் தலைவர் அறிவிப்பு

Published

on

காசா பகுதியில் இஸ்ரேல் தனது அத்துமீறலை நிறுத்தும்வரை பேச்சுவார்த்தைக்கோ அல்லது இருதரப்பு கைதிகள் பரிமாற்றத்துக்கோ வாய்ப்பு இல்லை என ஹமாஸ் தலைவர் பாஸெம் நைம் தெரிவித்துள்ளார்.

மேலும் இஸ்ரேலுடனான போரை நிறுத்துவது தொடர்பான எந்தவித முயற்சிக்கும் ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பில் போர் இடைநிறுத்தம் உள்ளிட்ட மூன்று கட்ட செயல்திட்டத்தை முன்வைத்துள்ளதாக எகிப்து தெரிவித்துள்ளது.

இந்த செயல்திட்டம் குறித்து இஸ்ரேல், மற்றும் ஹமாஸ் தரப்பில் இருந்து பதிலை எதிர்பார்த்திருப்பதாகவும், பதில் வந்தவுடன் செயல்திட்டம் குறித்து கூடுதல் தகவல்களை வெளியிடுவதாகவும் எகிப்து தெரிவித்துள்ளது.

Exit mobile version